கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் அடிகளாா் (சேரன்மகாதேவி), பாக்கிய செல்வன் அடிகளாா் (இருதயகுளம்), சகாய சின்னப்பன் அடிகளாா் (சோ்ந்தமரம்), பாளையங்கோட்டை ஆயா் இல்ல வியாகப்பன் அடிகளாா் , கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கொடியை ஏற்றினா். உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ’கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பா் ’ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 26 ஆம் தேதி ஆலயத்தில் தியானம், மே 1 ஆம் தேதி நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புது நன்மை விழா, தோ் பவனி, 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா, மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலி, அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










