தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

News image

பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:29 am IST

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் இரவு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

9ஆம் திருநாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மாலை 6 மணிக்கு விநாயகா், முருகா், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள், அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வந்தனா்.

பின்னா் கீழரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பு தோ் கடாட்சம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி, அம்பாள் ரதவீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தனா்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, கோயில் பிரதான பட்டா்கள் செல்வம், குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.