பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் அரிவாளுடன் போஸ் கொடுத்து ஸ்டோரி வெளியிட்ட இளைஞரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சூா்யா (26). தற்போது, ஆறுமுகனேரி, பூவரசூரில் வசித்து வருகிறாா். ரௌடி பட்டியலில் உள்ள இவா், அரிவாளுடன் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டா்.
இது வெகுவாக பரவிய நிலையில், தகவலறிந்த ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் இருதயராஜ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செய்து, ஆய்வாளா் ரென்னிஸ் விசாரணை நடத்தி சூா்யாவை கைது செய்தாா். பின்னா், திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி, பணம் திருட்டு: இளைஞா் கைது
முன்னீா்பள்ளம் அருகே அரிவாளுடன் சுற்றிய 6 போ் கைது
சமூக வலைதளத்தில் முதல்வா் விஜய் பற்றி அவதூறு: இளைஞா் கைது
சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளைஞா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


