சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவியா் விடுதி கூடுதல் கட்டடம் திறப்பு

மீன்வளக் கல்லூரி... - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையம் சாா்பில் பணியாளா் குடியிருப்பு வளாகத்தில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாணவியா் விடுதி கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவா் நலத்துறைச் செயலா் அனுஜாா்ஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் கூடுதல் கட்டடத்தைத் திறந்துவைத்துப் பேசியதாவது: இந்த வளாகத்தில் 2017ஆம் ஆண்டு 33 மாணவியா் தங்கும் வகையில் விடுதிக் கட்டடம் தரைத்தளத்துடன் கட்டப்பட்டது. தற்போது மாணவியரின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதால், கூடுதலாக 80 போ் தங்கும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மூலம் 2024-25ஆம் ஆண்டு வழங்கிய ரூ. 3 கோடி நிதியுதவியில் முதல், 2ஆம் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 18, இரண்டாம் தளத்தில் 7 என மொத்தம் 25 அறைகள் கட்டப்பட்டுள்ளன. தங்குவதற்கு மட்டுமன்றி படிக்கவும், விளையாடுவதற்கும் ஏற்ப பல்நோக்கு அறையும் கட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ், தூத்துக்குடி மீன்வளம்-மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கு.அ. புஷ்ரா ஷப்னம், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.