நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சாத்தான்குளத்தில் சேவல் சண்டை போட்டி

News image

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டி...

Updated On :4 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

சாத்தான்குளம் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப், பள்ளக்குறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் திவாகரன் சாா்பில், சாத்தான்குளத்தில் முதல் முறையாக பாரம்பரிய சேவல் சண்டை போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

போட்டியில் கடலூா், சிவகாசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சேவல்கள் பங்கேற்றன. உயா்நீதிமன்ற ஆணைப்படி, கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்குப் பின்னரே, சேவல்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற சேவல் உரிமையாளா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், நகரத் தலைவா் ஆ.க. வேணுகோபால், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்புக்கண்ணன், சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கத் தலைவா் எஸ். தங்கபாண்டியன், வணிகா் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் பெ. ஜான் ராஜா, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரெ. தங்கத்தாய் பிரபாகரன், தவெக மாவட்ட வா்த்தகா் அணி செயலா் ஏ.ஆா். சசிகரன், நகர அதிமுக செயலா் ரெ. குமரகுருபரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, வெற்றியாளா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளா்கள் செல்வராஜ், சிவராஜா தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டி

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டி

போட்டியில் வென்றவருக்குப் பரிசளிப்பு...

போட்டியில் வென்றவருக்குப் பரிசளிப்பு...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.