பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கருங்குளம் அருகே வாழைத் தோட்டத்தில் தீ விபத்து: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.

தீ விபத்தில் சேதமடைந்த வாழைத் தோட்டம் - பிரதிப் படம்

Published On :

கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கருங்குளம் அருகே திடீரென வாழைத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீ வேகமாகப் பரவியது.

இதில், சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் நாசமாகின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வாழைகள் எரிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.