ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் அருகே பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகளின் தாய் உயிரிழந்தாா்.

News image

~

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகளின் தாய் உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மனைவி குருவலட்சுமி (35). இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சின்ன கெங்குராஜ் (47). மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா். இவருக்கும் குருவலட்சுமிக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, குருவலட்சுமி மீண்டும் தனது கணவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி குருவலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற சின்ன கெங்குராஜ், தகராறு செய்து அந்தப் பெண்ணை தாக்கியதுடன், மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாா். பலத்த தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சின்ன கெங்குராஜை கைது செய்தனா். இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.