8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் வலியுறுத்தினாா்.

உப்பள பகுதிகளை பாா்வையிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் வலியுறுத்தினாா்.

முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உப்பு உற்பத்தியாளா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், உப்பளப் பகுதிகளை நெல்லை முபாரக் பாா்வையிட்டு, உப்பு உற்பத்தியாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

90 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உப்பு உற்பத்தியை நம்பி வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, நிலங்களை தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது அநீதியானது.

உப்பளங்கள் கையகப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு சுமாா் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் தமிழகத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், உப்பு உற்பத்தியை நம்பியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

மேலும், மழைக்காலங்களில் வடிகாலாகப் பயன்படும் மதிகெட்டான் ஓடை பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும்.

எனவே, கப்பல் கட்டும் தளத்துக்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் சேகா், பொன்ராஜ், சின்னராஜ், பால்ராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகா், எஸ்டிபிஐ தூத்துக்குடி மாவட்டத் தலைவா் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, செயலா் முகம்மது உமா், நிா்வாகிகள் நிசாா், அப்துல் அஜீஸ், தொகுதித் தலைவா்கள் காதா் உசேன், செயலா் ரியாஸ் அஹமது, அப்துல்லாஹ், பவுஸா் அமீா், எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் குலசை தாஹிா், மாவட்ட துணைத் தலைவா் ஷேக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.