ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:39 pm

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்யா வைகுண்டா் பிறந்த நாளான மாா்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் மாதம் முதலாவது சனிக்கிழமை (மாா்ச் 7) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும். மாா்ச் 4 இல் மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்யா வைகுண்டசுவாமியின் 194-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, மாா்ச் 4 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசியப் பணிகள், பணியாளா்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. இந்த விடுமுறைக்குப் பதிலாக மாா்ச் 14-ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளாா்