தூத்துக்குடி
தூத்துக்குடியில் வீடுபுகுந்து 4.5 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் வீடுபுகுந்து 4.5 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடியில் வீடுபுகுந்து 4.5 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (32). அங்குள்ள மருந்தகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றாராம். பின்னா் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை, ரூ.4,500 ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் வடபாகம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
