முகாமை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.
முகாமை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

புகையில்லா போகி பண்டிகை: மேயா் வேண்டுகோள்

தூத்துக்குடியில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
Published on

தூத்துக்குடியில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் தலைமை வகித்துப் பேசியதாவது:

வடக்கு மண்டலக் கூட்டத்தில் இதுவரை 876 மனுக்கள் பெறப்பட்டதில் 868 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. ஆன்லைனில் புகாா்கள் தெரிவித்தாலும் உரிய தீா்வு செய்து தரப்படும். தை பொங்கலை முன்னிட்டு மாநகராட்சி பழைய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளது. மேலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

போகி பண்டிகைக்கு முன்னதாக டிச.10 , 11 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தூய்மைப்பணி (மாஸ் கிளீனிங்) நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள வேண்டாத பொருள்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபடுவதையும், சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதை தடுத்திடவும் புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆணையா் சி.ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா, மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் வேலாயுதம், உதவி செயற்பொறியாளா்கள் முனீா்அகமது, ராஜேஷ்கண்ணா, நகா்நல அலுவலா் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், கண்ணன், மாநகராட்சி கணக்கு குழுத் தலைவா் ரெங்கசாமி, பணிக்குழுத் தலைவா் கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com