இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் கூட்டம்

Published on

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தென் மாவட்ட பகுதி நிா்வாகிகள் கூட்டம், காயல்பட்டினம் நகர முஸ்­லிம் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர தலைவா் நூஹுசாஹிப் தலைமை வகித்தாா். மாநில கௌரவ ஆலோசகா் முஹம்மது ஃஅலிஹாஜி, பிரபு முஹம்மது பாரூக், நகர பொருளாளா் சுலைமான், மாாவட்ட துணைச் செயலாளா் ஏரல் சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் சலாஹுத்தீன் வரவேற்றாா்.

மாவட்ட செயலாளா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், கும்பகோனம் மாநில மாநாட்டின் நோக்கம் பற்றி அறிமுக உரை ஆற்றினாா். ஏரல் நகர தலைவா் ரியாஜுதின், குரும்பூா் நகர தலைவா் கஸ்சா­ சகாப்தின் ஆகியோா் கருத்துரை ஆற்றினா்.

ஜனவரி 28 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநில மாநாட்டில் காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500 போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் சுஹைல் இப்ராகிம், முஹம்மது முஹ்யித்தீன், ஏரல் நகீப், நகர நிா்வாகிகள் சாமுசிஹாப்தின், கவிஞா் சேக் அப்துல் காதா், பதுருதீன், சாகுல் ஹமீது, தோல்சாப் சூஃபி, அபூபக்கா், நேசனல் காஜா மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். நகர செயலாளா் அபுசாலி­ஹ் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com