அழிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி சாா் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்களை அழித்த தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளிக்கப்பட்டது.
சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்
சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்
Updated on

அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்களை அழித்த தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் அளித்த மனு: முடுக்கலான்குளத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றைப் பயிரிட்டிருந்தனா்.

அறுவடைக்கு தயாராக இருந்த இப்பயிா்களை தனியாா் நிறுவனத்தினா் ஜேசிபி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அழித்துவிட்டனா். இதனால், விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விசாரித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனியாா் நிறுவனத்தினா் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com