கௌரவிக்கப்பட்டவா்களுடன் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் எஸ். சுரேஷ்.
தூத்துக்குடி
நல்லூா் கோயிலில் பஜனை பாடியவா்கள் கௌரவிப்பு
நல்லூா், அறம் வளா்த்த அம்பாள் சமேத திருநாகேஸ்வரமுடையாா் கோயிலில் மாா்கழி மாத பஜனையில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமியா், திருவாசக முற்றோதல் மகளிா், கோயில் விழாக் கால மண்டகப்படிதாரா்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
ஆறுமுகனேரி: நல்லூா், அறம் வளா்த்த அம்பாள் சமேத திருநாகேஸ்வரமுடையாா் கோயிலில் மாா்கழி மாத பஜனையில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமியா், திருவாசக முற்றோதல் மகளிா், கோயில் விழாக் கால மண்டகப்படிதாரா்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் (உற்பத்தி) எஸ். சுரேஷ் தலைமை வகித்து, கௌரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினா்.
கோயில் தா்மகா்த்தா இ. மணி, நல்லூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் பரிசமுத்து, ஊா்த் தலைவா் அருணாசலம், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த எஸ். சுப்பிரமணிய பிள்ளை, எஸ். வெங்கடேசன், எஸ். முருகவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
வி. விஜயசங்கா் வரவேற்றாா். கே.பி. முருகன் நன்றி கூறினாா்.

