தூத்துக்குடியில் போலீஸாா் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், போலீஸாா் இடையே திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். ஆட்சியா் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளா்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.
இதனால், ஆத்திரமடைந்த போலீஸாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளா்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனா்.
இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனா். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பேட்டியளித்தனா்.
