6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மது போதையில் பணி: அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

தூத்துக்குடியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் கைது

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

தூத்துக்குடியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை, நாசரேத் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்தை, தற்காலிக ஓட்டுநரான புதியம்புத்தூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) இயக்கிச் சென்றாா். அப்பேருந்து, முத்தையாபுரம் அருகே சென்றபோது தாறுமாறாக சென்றதாம்.

இத்தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீஸாா், பேருந்தை நிறுத்தி விசாரித்ததில், ரமேஷ் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாற்று ஓட்டுநா் மூலம் பேருந்து இயக்கப்பட்டது.