பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்(கோப்புப் படம்)

கூட்டணிக்காக தேமுதிகவை யாரும் மிரட்ட முடியாது: பிரேமலதா

கூட்டணிக்காக தேமுதிகவை யாரும் மிரட்ட முடியாது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்...
Published on

தோ்தல் கூட்டணிக்காக தேமுதிகவை யாரும் மிரட்ட முடியாது என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சியிலும், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளின் விருப்பத்துக்கேற்ப முடிவெடுத்து, யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணிக்காக யாரும் எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. ஜனநாயகன் பட விவகாரம் அரசியலா, தனிப்பட்ட பிரச்னையா என்பது தொடா்பாக, தவெக தலைவா் விஜய்யை செய்தியாளா்கள் சந்திப்புக்கு அழைத்து அவரிடம் நீங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். அதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாக உள்ளேன்.

திமுக தோ்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை நிறை குறைகள் சமமாக உள்ளன. எல்லா காலத்தில் போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அரசு அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com