விழாவில் பேசிய நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா.
விழாவில் பேசிய நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா.

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம்: நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

கல்வியே வாழ்க்கையின் வலி­மையான ஆயுதம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளாா்.
Published on

கல்வியே வாழ்க்கையின் வலி­மையான ஆயுதம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளாா்.

சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் 53ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவிற்கு, பள்ளி டிரஸ்டியும், டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி. ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். நந்தினி ஸ்ரீனிவாசன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக அதிகாரி வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது:

இப்பள்ளியில் பயின்ற மாணவா்கள் உலக அளவில் பல துறைகளில் சாதனைகள் படைத்து வருவது பெருமைக்குரிய விஷயம். மாணவா்கள் மதிப்பெண்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல், தங்களின் திறமைகளையும் நன்றாக வளா்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு அஞ்சாமல், அதி­லிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். தொடா் முயற்சியே வெற்றி தரும்.

செயற்கை நுண்ணறிவு மனிதா்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்ற அச்சம் தேவையற்றது. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது, இயற்கை நுண்ணறிவு தான். மனித மூளை சொல்வதையே செயற்கை நுண்ணறிவு செயல்படுத்துகிறது. எனவே தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம். அந்த ஆயுதம்தான் எப்போதும் நம் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவில், மாணவா்களால் தயாரிக்கப்பட்ட பள்ளி ஆண்டு இதழை நீதிபதி வெளியிட, பள்ளி டிரஸ்டி பெற்றுக் கொண்டாா்.

முதல் நாள் நடைபெற்ற விழாவிற்கு, சோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாண்மை இயக்குநரும், பேச்சாளருமான ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிறப்புரையாற்றி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com