கோவில்பட்டி அருகே புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக முதியவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வடக்கு திட்டங்குளம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த சங்கையா மகன் மாரிமுத்துவை (67) கைது செய்து, 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை மாலை வடக்கு திட்டங்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு நின்ற இருவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்கு திட்டங்குளம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (28), கடலையூா் சாலை, பழந்தோட்ட நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கர நாராயணன் (52) ஆகியோரை கைது செய்து, 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வையம்பட்டியில் புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே புகையிலை பொருள்கள் பதுக்கியவா் கைது
புகையிலை பொருள்களை விற்பனை செய்தவா் கைது

தென்காசியில் 510 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


