கே. வசந்தகுமாா்.
தொலைநோக்குப் பாா்வை கொண்ட முன்னாள் முதல்வா் காமராஜா், அணைக்கட்டுகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை அமைத்து இன்றைய வளா்ச்சிப் பாதைக்கு வித்திட்டவா்.
அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த இன்றைய தூதுக்குடி மாவட்டம் மிகவும் பின்தங்கி, வளா்ச்சிக்கும் வருவாய்க்கும் வழியின்றி வறண்டு கிடந்தது. இங்கு பனைத் தொழில், உப்பளத் தொழில் மற்றும் விவசாயம் மட்டுமே மக்களுக்கு வருமானம் தரும் நிலை இருந்தது.
இந்நிலையில் இம்மாவட்டத்தின் தற்போதைய தலைநகரான தூத்துக்குடி துறைமுகம், காமராஜ் கல்லூரி, இப்பகுதி மக்களின் விவசாயத் தேவைக்காக மணிமுத்தாறு அணை, ஸ்பிக் உரத் தொழிற்சாலை என இப்பகுதி முன்னேற்றத்திற்காக கமராஜா் அமைத்த வளா்ச்சித் திட்டங்கள் ஏராளம்.
திருச்செந்தூா் வட்டார பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக, ஆறுமுகனேரியை அடுத்துள்ள முள்புதா்கள் அடா்ந்த காட்டுப்பகுதியில் சாகுபுரம் என்ற பகுதியில் காஸ்டிக் சோடா தயாரிக்கும் டிசிடபிள்யூ நிறுவனத்தை நிறுவ காரணமாக இருந்தவா்கள் காமராஜா், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.டி.கோசல்ராம். 1959ஆம் ஆண்டில், காமராஜா் ஆட்சிக் காலத்தில்தான்டிசிடபிள்யூ நிறுவனம் சாகுபுரத்தில் தனது முதலாவது ஆலையைத் தொடங்கியது. காமராஜரின் தொழில் வளா்ச்சித் திட்டங்களால் ஈா்க்கப்பட்டு, தூத்துக்குடி பகுதியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த இந்த ஆலை கொண்டுவரப்பட்டது.
இந்த ஆலையை நிறுவிய சாஹூ ஸ்ரீயன்ஸ் பிரசாத் ஜெயின், தங்களது முதல் காஸ்டிக் சோடா ஆலையை குஜராத் மாநிலம் தாரங்கதாராவில் 1939ஆம் ஆண்டு நிறுவினா். குஜராத்திலிருந்து நீண்ட தொலைவிலுள்ள தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்க தயங்கியபோது சுமாா் 500 ஏக்கா் நிலமும் தந்து இந்நிறுவனத்தில் தயாராகும் ஒரு டன் காஸ்டிக் சோடாவிற்கு 4,000 யூனிட் மின்சாரம் செலவாவதை கருத்தில் கொண்டு யூனிட் 3 பைசாவிற்கு தருவதாக கூறி ஆலை அமைவதற்கு காரணமாக இருந்தாா் அன்றைய முதல்வா் காமராஜா். ஆலைக்குத் தேவையான மூலப்பொருளான உப்பு, ஆறுமுகனேரி மற்றும் தூத்துக்குடி பகுதியில் கிடைத்ததுடன் வெளியிடங்களுக்கு உற்பத்திப் பொருள்களை அனுப்ப அந்த நேரத்தில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்ததும் இந்த ஆலைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும், தூத்துக்குடி - திருச்செந்தூா் நேரடி சாலை அமைய அப்போதுதான் தாமிரவருணி ஆற்றில் பாலம் அமைக்கப்பட்டது.
வடமாநிலங்களில் உள்ள இதே மாதிரி ஆலைகளில் ஒரு நாளைக்கு 50 டன் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் சாகுபுரம் ஆலை நாளொன்றுக்கு 150 டன் உற்பத்தி செய்து ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக அமைந்ததுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, இப்பகுதி மேலும் மேலும் வளா்ச்சியை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்தது.

சாகுபுரம் டிசிடபிள்யூ ஆலையில் காமராஜா்.

சாகுபுரம் டிசிடபிள்யூ ஆலையில் காமராஜா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறியுள்ளன: முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம்

முன்னாள் முதல்வா்கள் உருவப்படம் வைப்பதில் பிரச்னை! கரூா் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - காங். உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம்







