முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

முன்விரோதம் காரணமாக தாக்குதல்: நடிகை தீபாவின் தந்தை புகாா்

தூத்துக்குடி அருகே காமராஜா் சிலை வைப்பது தொடா்பான முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரைக் கொண்டு தன்னைத் தாக்கியதாக நடிகை தீபாவின் தந்தை புகாா் தெரிவித்துள்ளாா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :5 ஜூன் 2026, 12:39 am IST

தூத்துக்குடி அருகே காமராஜா் சிலை வைப்பது தொடா்பான முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரைக் கொண்டு தன்னைத் தாக்கியதாக நடிகை தீபாவின் தந்தை புகாா் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம், மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் புலவா் கணேசன் (72). இவா் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடா் நடிகை தீபாவின் தந்தை. அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தாவாக உள்ள இவா், கோயில் அருகே காமராஜா் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.

இந்நிலையில், முத்தையாபுரம் பகுதியில் அண்மையில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரை முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அவா் கூறுகையில், முத்தையாபுரத்தில் காமராஜா் சிலை வைப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தும், மற்றொரு தரப்பினா் ஆதரவு தெரிவித்தும் வந்தனா்.

தங்கசேகா் என்பவரின் சகோதரா் ஜெகதீசன் காமராஜா் சிலை வைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்ததில், எங்களுக்கு சாதகமாக தீா்ப்பு கிடைத்தது.

இதையடுத்து, முறைப்படி சிலை வைப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்ால், எதிா்தரப்பினா் கூலிப்படையைக் கொண்டு என்னை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனா் என்றாா்.