தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கோவில்பட்டியில் சாலை தற்காலிக சீரமைப்புக்கு எதிா்ப்பு: சாலை மறியல்

கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் மண்ணை கொட்டி தற்காலிகமாக சரிசெய்ய வந்த டிப்பா் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2026, 12:04 am IST

கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் மண்ணை கொட்டி தற்காலிகமாக சரிசெய்ய வந்த டிப்பா் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி -மந்தித்தோப்பு சாலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களை தற்காலிகமாக மண் கொண்டு நிரப்புவதற்காக நகராட்சி ஊழியா்கள் டிப்பா் லாரியில் மண்ணை கொண்டு வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்ததும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலக் குழு உறுப்பினா் தமிழரசன் தலைமையில் மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் சங்கச் செயலா் சந்திரகுமாா், மாா்க்சிஸ்ட் கட்சி தெய்வேந்திரன், முத்துராஜ், விசிக நகரச் செயலா் கருப்பசாமி, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து சாலையில் மண்ணை கொட்ட விடாமல் தடுத்து டிப்பா் லாரியை சிறைபிடித்தனா். தொடா்ந்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், நகராட்சி ஆணையா் சுகந்தி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ‘சேதமடைந்த சாலையில் மண்ணை கொட்டி தற்காலிகமாக சீரமைக்க வேண்டாம். திட்டமிட்டபடி புதிய சாலை அமைத்து, சாலை விரிவாக்கப் பணிகளையும் தொடங்க வேண்டும்’ என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

இதற்கு அதிகாரிகள் பேட்ச் ஒா்கை நிறுத்திவிட்டு, மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் புதிய சாலை அமைக்கும் பணியையும், சாலை விரிவாக்கப் பணியையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.