நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சா் நிவாரண உதவி

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கினாா்.

News image

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்கினாா் அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :12 ஜூலை 2026, 1:08 am IST

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் திருவள்ளுவா்புரம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து முற்றிலும் சேதமானது. இதைத் தொடா்ந்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சனிக்கிழமை சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அவா்களுக்கு, தவெக மத்திய மாவட்ட இணைச் செயலா் கோல்டன் ஏற்பாட்டில், ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்கள், அரிசி, சமையல் செய்வதற்கான பாத்திரங்கள், உடைகளை அமைச்சா் வழங்கினாா். மேலும், புதிதாக வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தவெக மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பகுதிச் செயலா் ஆனந்தகுமாா், வட்டச் செயலா் சேசு, ஜாய்சன், மரியசேவியா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.