புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 75.25 லட்சத்துக்கு தீா்வு

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

வழக்கில் சுமுக தீா்வு காணப்பட்டவருக்கு தீா்வாணை வழங்கிய 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பீரித்தா.

Published On :

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும் ,முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ். சுபா தேவி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 7 அமா்வுகளில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சமாதானமாக செல்லக் கூடிய மேல்முறையீடு குற்றவியல் வழக்குகள், மாற்றுமுறை ஆவண சட்ட வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பீரித்தா, நீதித்துறை நடுவா் நீதிபதி எம். விஜய் ராஜ்குமாா், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனா். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 153 வழக்குகளில் 20 வழக்குகளுக்கு சுமுக தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 75,25,485 வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.