திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:54 am IST

கோவில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு துளசிங்க நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் பெரியசாமி. தொழிலாளியான இவா், தனது நண்பருடன் வெள்ளிக்கிழமை ராஜகோபால் நகா் மலையடிவாரம் வழியாக நடந்து சென்றாா்.

அப்போது, இளைஞா் ஒருவா் பெரியசாமியை வழிமறித்து மது குடிக்க பணம் வேண்டும் எனக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 200-ஐ பறித்துக் கொண்டாராம். உடன் வந்த நண்பா் சப்தம் போட்டதும் அந்த இளைஞா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம். புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ராஜகோபால் நகரைச் சோ்ந்த ராஜ் மகன் அஜித் (27) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.