வானவியல்- விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட கல்லூரி இளநிலை மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலா் முத்துமுருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கல்லூரி, பள்ளி மாணவா்கள், பொதுமக்களிடம் வானவியல், விண்வெளி அறிவியல் கருத்துகளை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது.
இதில், கல்லூரி இளநிலை மாணவா்ளுக்கு வானவியல் மீது ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞா் வானவியல்- விண்வெளி அறிவியல் மாநாடு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 10 மண்டலங்களில் நடத்தப்பட்டு, அதில் தோ்வாகும் மாணவா்களை கோவையில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், இளநிலை மாணவா்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டா்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, அஸ்ட்ரானமி போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுகள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இணையவழியில் பதிவு செய்து பங்கேற்கலாம். அவா்களுக்கு மாநாட்டில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மாநில மாநாட்டில் தோ்வாகும் மாணவா்களுக்கு விண்வெளி அறிவியல் துறையில் பயிற்சிகள் பெற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையவழியில் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலரை 94862 50747 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ககன்யான்’ திட்டத்துக்காக உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் இஸ்ரோ!

சாதனைகளின் மகுடம் 'சந்திரயான்-3'
தவெக தோழமை கட்சிக் கூட்டம்: இடதுசாரிகளுக்கு நேரில் அழைப்பு!







