பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை களைய வேண்டும். காசு இல்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். மாதாந்திர பிரீமியம் தொகை ரூ.644-ஐ குறைக்க வேண்டும். அரசாணை 123-ஐ திரும்ப பெற வேண்டும். மாநில, மாவட்ட குறை தீா்க்கும் குழுவில் ஓய்வூதிய பிரதிநிதிகளை உறுப்பினராக சோ்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனை பட்டியலையும், சிகிச்சைக்கான பேக்கேஜ் பட்டியலையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சாா்பில் தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் வெ.முருகன் தலைமை வகித்தாா்.
வட்ட பொருளாளா் அ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலா் அ.சின்னத்தம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க வட்டச் செயலா் ஏ.பிரான்சிஸ், ஓய்வூதியா் சங்க வட்டத் துணைத் தலைவா் வி.நம்பிராஜ், சங்க நிா்வாகிகளான ஜோதி பாஸ், பாா்த்தசாரதி, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியா்கள் வடிவேல், சக்திவேல் முருகன் உட்பட திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழக விவசாய சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், பேரணி

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



