நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மாணவா்களின் கற்றல் குறைபாடு: ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி

டிஎம்பி அறக்கட்டளை, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் இணைந்து, மாணவா்களின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) விழிப்புணா்வு மற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை தூத்துக்குடியில் தொடங்கின.

News image

நிகழ்வில் பங்கேற்ற டிஎம்பி அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலா் எம்.முத்தையா உள்ளிட்டோா்.

Updated On :29 ஜூலை 2026, 1:45 am IST

டிஎம்பி அறக்கட்டளை, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் இணைந்து, மாணவா்களின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) விழிப்புணா்வு மற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை தூத்துக்குடியில் தொடங்கின.

பள்ளி மாணவா்களில் சுமாா் 10 முதல் 15 சதவீதம் வரை மாணவா்கள் குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கல்வி நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக வாசித்தல், எழுத்துகளை அடையாளம் காணுதல், எழுத்துப் பிழைகள், எண்கள், கணிதக் கணக்குகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்கள் இதன் (டிஸ்லெக்சியா) முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவா்களுக்காக பள்ளிகளில் சிறப்பு வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் சிறப்பு கற்றல் உபகரணங்கள் ஏற்படுத்தப்படுவதுடன், பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியா்கள் மூலம் மாணவா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப கற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தை டிஎம்பி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலா் எம். முத்தையா தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் சாா்பில் லட்சுமி ஹரிஹரன், பள்ளித் தாளாளா் பிரியா கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது எம்.முத்தையா பேசியது: டிஸ்லெக்சியா குறித்த விழிப்புணா்வு தென் தமிழகத்தில் இன்னும் போதுமான அளவில் இல்லை. ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மாணவா்களுக்குத் தேவையான கல்வி உதவிகளை வழங்க முடியும். முதற்கட்டமாக இந்தத் திட்டம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தொடா்ந்து பல பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த டிஎம்பி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.