ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image

பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கும் திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி, பொதுச் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் கோவில்பட்டி புதுகிராமம், ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூன் 2026, 12:38 am IST

கோவில்பட்டி, புதுகிராமம், ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில், அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழுத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். துணைச் செயலா் மாரிகண்ணன், குழு ஆலோசகா் திருப்பதி கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி, பொதுச் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் சிவசங்கரலிங்கம், நடராஜன், செந்தில், ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், நினைவு பரிசு, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்பில் காசோலைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல கோவில்பட்டி ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 35 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. 1330 திருக்குறளை ஒப்பித்த என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி யாசினிக்கு ரூ. 3 ஆயிரம், நினைவு பரிசு வழங்கப்பட்டன.

மகிழ்வோா் மன்ற இயக்குநா் ஜான்கணேஷ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை விநாயக சுந்தரி, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை முருக சரஸ்வதி, வழக்குரைஞா் முத்துராமலிங்கம், ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு ஆலோசகா்கள் கோமதி சங்கா், கோபாலகிருஷ்ணன், ஜெயக்குமாா், தினேஷ் பாலாஜி, ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழுவின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு செயலா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். ஆலோசகா் கண்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.