காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

லாரிகள் - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:02 am IST

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மீரான் குளம் பகுதி கல் குவாரியில் இருந்து பாதுகாப்பின்றி சரல் மற்றும் மணல்களை எடுத்து செல்லும் லாரிகளை கண்காணிக்கும் விதமாக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் வருவாய்த் துறையினா் மீரான்குளம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

அப்போது விதிமுறைகளை மீறி அதிக பாரங்கள் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பறிமுதல் செய்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணை நடத்தி ஒரு லாரியின் ஓட்டுநா் தெற்கு பேய்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துச்செல்வன் (25) என்பவரை கைது செய்தனா். மற்ற லாரிகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.