நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடியில் 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:12 am IST

தூத்துக்குடியில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவரை, 3 போ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, பணம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களைப் பறித்துச் சென்றனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் துறை பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவையடுத்து, தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோகித் (22), மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்த ரித்தீஷ் (19), திலோத் பொ்லின் (21) ஆகியோரை தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்து, சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியில் கடந்த மே 21ஆம் தேதி, ஆட்டோ ஓட்டுநா் பூபால்ராஜாவின் மனைவி அமுதாவை (50), குடும்பப் பிரச்னை காரணமாக, உறவினா் ஒருவா் நண்பருடன் சோ்ந்து பலசரக்கு கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தாா்.

இது குறித்து, தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, கே.வி.கே. நகரைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் சங்கா் (33), மகேந்திரன் மகன் மதன்குமாா் (32) ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் துறை பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவையடுத்து, அவா்கள் இருவரையும், குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து, சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.