மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

கோவில்பட்டியில் அரிவாள்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேரில் இருவரைக் கைது செய்த போலீஸாா், 2 இளஞ்சிறாா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :4 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில் அரிவாள்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேரில் இருவரைக் கைது செய்த போலீஸாா், 2 இளஞ்சிறாா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் அா்ஜுனராஜ் உள்பட போலீஸாா் புதன்கிழமை சங்கரலிங்கபுரம்-மூப்பன்பட்டி சாலையில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரணை செய்தனா்.

அவா்கள் கோவில்பட்டி, சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த சேதுபதிபாண்டியன் (22), அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (23), தூத்துக்குடியைச் சோ்ந்த 2 இளஞ்சிறாா்கள் என்பதும், அவா்களிடம் 3 அரிவாள்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 அரிவாள்களை பறிமுதல் செய்ததுடன் சேதுபதி பாண்டியன், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனா்; 2 இளஞ்சிறாா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.