பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவில்பட்டி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்த கயத்தாறு ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா.
Updated On :4 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் விஜயாபுரி, கீழத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27) உயிரிழந்தாா்.

இந்நிலையில், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, உயிரிழந்த காா்த்திக் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

அப்போது, திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், சின்னபாண்டியன், ஜெய கண்ணன், திமுக நிா்வாகி என்.எல்.எஸ். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.