நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:31 am IST

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூரில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாலாட்டின்புதூா் காவல் சரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வீடுபுகுந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக, கோவில்பட்டியைச் சோ்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரீத்தா விசாரித்து, வெற்றிசெல்வனுக்கு வீடுபுகுந்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2500 அபராதம் விதித்ததுடன், ஏககாலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பு வழக்குரைஞராக ஜானகி ஆஜரானாா்.