சாத்தான்குளத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின் (42). இவா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்கூட்டியில் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, சாத்தான்குளம், கருமேணி ஆற்றுப்பாலம் அருகே பின்னால் வந்த வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரோஸ்லின் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் மணியிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


