இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :10 மார்ச் 2026, 12:25 am IST

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கான ’டயபா்’ தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கிடங்கில் ’டயபா்’ தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலைக்கு அருகே உள்ள மின்மாற்றியிலிருந்து திங்கள்கிழமை நண்பகலில் தீப்பொறிகள் சிதறியதாக கூறப்படுகிறது. அந்த தீப்பொறிகள், டயபா் தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பஞ்சுக் கிடங்கின் மீது விழுந்தனவாம். இதில் கிடங்கில் இருந்த பஞ்சுகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தகவலறிந்த தூத்துக்குடி, தொ்மல் நகா், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்கு பின்னா் அவா்கள் தீயை கட்டுப்படுத்தினா்.

தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் வெகுநேரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image