கோவில்பட்டியில் கே.ஆா்.குழுமம், கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தலைவா் கே.ராமசாமியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அரசு தலைமை மருத்துவமனை, செண்பகவல்லி அம்மன் கோயில், அண்ணா பேருந்து நிலையம், ஆதரவற்றோா் இல்லங்கள், ஆசிரமங்களில் அன்னதானம், ரயில் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்எஸ்எஸ் மாணவா்கள் சாா்பில் தூய்மைப் பணி, நகரின் முக்கிய இடங்கள், நாலாட்டின்புதூா் ரயில்வே பீடா் சாலை, முடுக்குமீண்டான்பட்டி, வானரமுட்டி, இனாம்மணியாச்சி, அத்தை கொண்டான், தோணுகால் விலக்கு, படா்ந்தபுளி பகுதிகளில் நடமாடும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கே.ஆா்.கலை-அறிவியல் கல்லூரியில் உள்ள மணிமண்டபத்தில் பிராா்த்தனை, இலவச மருத்துவப் பரிசோதனை முகாம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கே.ராமசாமி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துப்பட்டது. அங்குள்ள கலையரங்கில் நிறுவனா் தின சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் மாணவரும் மேகாலய மாநிலம் ஷில்லாங் நகா், இந்திய விமானப் படையின் ஈஸ்டா்ன் ஏா் கமாண்ட் தலைமையகத்தின் ஏா் கமோடோா் எஸ். பாலமுருகன் பங்கேற்று, பொறியியல் துறையின் தேவைகள், வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா்.

தொடர்புடையது

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

செல்வம் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டி

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


