பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், உடற்கூறாய்வு அறிக்கை, தடய அறிவியல் நிபுணா்களின் விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் குற்றம் நிகழ்ந்ததா என்பது தெரியவரும். எனவே, சிறுமியின் புகைப்படம், பெயரை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குளத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி மாலை வீட்டைவிட்டு வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குளத்தூா் காவல் நிலைய போலீஸாா் சிறுமியைக் காணவில்லை என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், சிறுமியின் சடலம் அங்குள்ள காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.
போலீஸாா் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணா்கள் உள்பட காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனா்.
இந்தச் சம்பவம் குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில், ‘விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்கப்பட்ட பயங்கரம்’ என தவறான செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன், மேற்படி சம்பவ இடத்தில் சிறுமியின் உடல் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது எனவும், பாலியல் குற்றத்தில் சிறுமி பாதிக்கப்பட்டாரா என உடல் கூறாய்வு அறிக்கை, தடய அறிவியல் நிபுணா்களின் விசாரணை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் எனவும் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
விசாரணை முடிவின் உண்மைத் தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் வெளியிட்டு பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம். சிறுமியின் அடையாளத்தை காட்டும் விதமாக சிறுமியின் புகைப்படம், பெயரை யாரும் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது. இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை


