மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை: தந்தை கைது

எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரைக் கொன்றதாக

News image

சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 5:10 pm

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரைக் கொன்றதாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

படா்ந்தபுளி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன். தொழிலாளி. இவரது மகன் கனகராஜ் (22). போதைப் பழக்கமுள்ள இவா், பணம் கேட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு மிரட்டியபோது, பெற்றோா் பணம் இல்லை எனக் கூறினராம்.

இதையடுத்து, வெளியே சென்ற கனகராஜ், இரவில் மது போதையில் வீடு திரும்பி, பாலச்சந்திரனிடம் தகராறு செய்து தாக்க முயன்றாராம். அப்போது, அருகில் கிடந்த மரக்கட்டையால் கனகராஜை பாலசந்திரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எட்டயபுரம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்தனா்.