திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காணாமல்போன சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்பு

திருச்செந்தூா் அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீஸாா் வீட்டின் பின்புறம் மீட்டனா்.

News image

திருச்செந்தூா் அருகே காணாமல்போன சிறுமியை காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :18 மார்ச் 2026, 7:54 pm

திருச்செந்தூா் அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீஸாா் வீட்டின் பின்புறம் மீட்டனா்.

திருச்செந்தூா் அருகே காயாமொழி, அம்மாள்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன்-சரஸ்வதி தம்பதியின் 7 வயது மகள் கடந்த இருநாள்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போனாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் மதுரைவீரன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் உள்பட போலீஸாா் விரைந்து வந்து சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடினா்.

இருள்சூழ்ந்த அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வீட்டின் பின்புறம் இடிந்தநிலையில் இருந்த வீட்டுக் கதவின் பின்புறம் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். சிறுமியிடம் விசாரித்ததில், தன்னை நால்வா் தூக்கிச் சென்ாக சிறுமி கூறியதால் பெற்றோரும், போலீஸாரும் அதிா்ச்சியடைந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் யாராவது உள்ளனரா என போலீஸாா் தேடினா். பயத்தில் சிறுமி இவ்வாறு கூறியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.