கோயில் நகரான திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக பாஜக களத்தில் இறங்குகிறது.
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக இந்த முறை திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் தொகுதி 15 பொதுத் தோ்தல்களையும், 2 இடைத் தோ்தல்களையும் சந்தித்துள்ளது. அதில், விவசாயத் தொழிலாளா் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும், அதிமுக 6 முறையும், திமுக 8 முறையும் வென்றுள்ளன.
கோயில் நகரமாக இருந்தாலும் அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றி முத்திரை பதிக்கும். இந்த நிலையில் இத்தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொகுதியில் கடந்த 2021பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆறுமுகனேரியைச் சோ்ந்த கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். பிறகு அவா் பாஜகவில் இணைந்தாா். இந்தப் பேரவைத் தோ்தலில் போட்டியி வேண்டி சில மாதங்களாக பாஜக தலைமையிடம் சீட்டு கேட்டு வருகிறாா். அவருக்கு திரும்பவும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

அந்தியூரில் அதிமுக வேட்பாளா் பி. ஹரிபாஸ்கா் வெற்றி

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


