விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 52.69 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 52,69,515 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:53 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 52,69,515 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறையினரால் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 52,69,515 ரொக்கம், ரூ. 7,24,740 மதிப்பிலான பொருள்கள், ரூ. 2,13,297 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 5,82,600 மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து ரூ. 45,34,505 ரொக்கம், ரூ. 2,00,000 மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.