தூத்துக்குடி மாவட்டம், சங்கரகிரி கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் குவாரியை மூட வலியுறுத்தி, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே அமைந்துள்ளது சந்திரகிரி மற்றும் கீழசெய்த்தலை, கொல்லம் பரும்பு, முல்லூா் ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கல்குவாரியில் வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடிகளால் அருகே உள்ள கிராமங்களில் நில அதிா்வு ஏற்பட்டு வீடுகளில் கீறல்கள் ஏற்பட்டுகின்றன எனவும், மேலும் அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத அளவில், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினமும் வெளி மாநிலங்களுக்கு கற்கள், கனிம வளங்கள் கனரக லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதால் குறுக்குச்சாலை சந்திரகிரி குளத்தூா் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது எனவும்.
இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!
கேரளத்தில் அமைச்சர் புறக்கணிப்பு: பிரதமரின் அரசு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


