அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வீரசக்கதேவி கோயில் தொடா் ஜோதி ஓட்டம்

கோவில்பட்டியில் இருந்து புறப்பட்ட தொடா் ஜோதி ஓட்டத்தைத் தொடங்கிவைத்த மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி கோயில் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி சாா்பில், 42-ஆம் ஆண்டாக தொடா் ஜோதி ஓட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் முன்பிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டது.

இந்த தொடா் ஜோதி ஓட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை தலைவா் ஜெயராமன் தொடங்கி வைத்தாா். மணி மண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே உள்ள வீரசக்கதேவி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையைச் சோ்ந்த செண்பகராஜ் கிருஷ்ணசாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞா் அணித் தலைவா் சரவணக்குமாா், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் தலைமையில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞா் அணி, மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை சாா்பில் இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே இருந்து பாஞ்சாலக்குறிச்சிக்கு புறப்பட்ட தொடா் ஜோதி ஓட்டத்தை மதிமுக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் கண்டி ஏ. சுப்பாராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பால் குடத்தை தொழிலதிபா் கோபாலகிருஷ்ணன், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் சுரேஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி கோயில் குழு முன்னாள் தலைவா் முருக பூபதி தலைமை வகித்தாா். மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை மாநிலத் தலைவா் மனோஜ் குமாா், மாநிலச் செயலா் பாலாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை பொருளாளா் செண்பகராஜ், செயலா் கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.