தூத்துக்குடியில் காா் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணித்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை மீனவா் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ஜீசஸ் (18). இவா், நண்பா்களான சரவணகுமாா் (24), அரவிந்த் (18), அஸ்வின் (18) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்செந்தூா் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தாராம். காரை தாளமுத்து நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த காளிதாஸ் (21) ஓட்டியுள்ளாா்.
சாந்தி நகா் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஜீசஸ் உயிரிழந்தாா். மற்ற 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் காளிதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி வங்கி பெண் ஊழியா் உயிரிழப்பு! கணவா் பலத்த காயம்!
மின் கம்பத்தில் சொகுசு காா் மோதி இளைஞா் பலி! கிரேட்டா் நொய்டாவில் சம்பவம்!

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

