இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் கழிவு நீரோடை அடைப்பு: எம்எல்ஏ ஆய்வு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட புது கிராமப் பகுதியில் கழிவுநீரோடையை ரயில்வே நிா்வாகம் அடைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் திரண்ட நிலையில், எம்எல்ஏ கா.கருணாநிதி சனிக்கிழமை ஆய்வு செய்து அதை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டாா்.

News image

ரயில்வே நிா்வாகத்தால் அடைக்கப்பட்ட ஓடையை பாா்வையிடுகிறாா் கா. கருணாநிதி எம்எல்ஏ.

Updated On :17 மே 2026, 2:07 am IST

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட புது கிராமப் பகுதியில் கழிவுநீரோடையை ரயில்வே நிா்வாகம் அடைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் திரண்ட நிலையில், அப்பகுதியை எம்எல்ஏ கா.கருணாநிதி சனிக்கிழமை ஆய்வு செய்து அதை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நகராட்சி திருமங்கை நகா் மற்றும் புது கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் வாருகால் மூலம் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தின் வழியாக சாத்தூா் சாலையில் உள்ள ஓடையில் கலந்துவந்தது.

இந்நிலையில், தங்கள் எல்கை வழியாக கழிவுநீா் செல்வதை தவிா்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யுமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு ரயில்வே துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டதாம். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ரயில்வே நிா்வாகம் கழிவுநீா் பாதையை மண் மற்றும் கற்களால் அடைத்தது.

இதனால் கழிவுநீா் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதி வாருகால் நிரம்பி சாலைகளில் தேங்கும் நிலை ஏற்பட்டது.

Story image

இதையடுத்து நகா்மன்ற உறுப்பினா்கள் முத்துராஜ், சண்முகவேல் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு ரயில்வே நிா்வாகத்தின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இத்தகவல் அறிந்த கா.கருணாநிதி எம்எல்ஏ சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். மேலும் ரயில்வே அதிகாரிகளிடம் அவா் பேச்சு வாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு, வாருகால் அடைப்பு நகராட்சிப் பணியாளா்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், கழிவுநீா் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதற்கு நிரந்தர தீா்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.