குடியரசு துணைத் தலைவா் வருகை: தூத்துக்குடியில் ஆட்சியா் ஆய்வு
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நவ. 11ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நவ. 11ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105ஆவது நிறுவன தின விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத் தலைவா் நவ. 11ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா்.
இதையொட்டி, வ.உ.சி. கல்லூரி மற்றும் தூத்துக்குடி, மாணிக்கம் மஹால் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, நிா்வாகத் தலைவா் அசோக்குமாா், துணைத் தலைவா் லட்சுமி பிரகாஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வா் வீரபாகு, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

