தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்க் காப்பீடு: உளுந்து, பாசிப் பயறுக்கு நவ. 30 கடைசி நாள்; ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27ஆம் ஆண்டு ராபி பருவ சாகுபடிக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என, ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

விவசாயி. - கோப்புப்படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27ஆம் ஆண்டு ராபி பருவ சாகுபடிக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என, ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், இம்மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை, அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 252, பாசிப் பயறுக்கு ரூ. 209 பிரீமியம் செலுத்தி இம்மாதம் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு ரூ. 314, பருத்திக்கு ரூ. 392 பிரீமியம் செலுத்தி டிச. 15-க்குள்ளும், சோளத்துக்கு ரூ.165, நிலக்கடலைக்கு ரூ. 161 பிரீமியம் செலுத்தி, டிச. 16-க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
கம்பு பயிருக்கு ரூ. 147, எள் ரூ. 136, சூரியகாந்திக்கு ரூ. 173 பிரீமியம் செலுத்தி, டிச. 30-க்குள்ளும், நெல்லுக்கு (நவரை) ரூ. 559 பிரீமியம் செலுத்தி, 1.2.2027-க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகள் அருகேயுள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்ட இணையதளம் ஆகியவை வாயிலாக காப்பீட்டுக் கட்டணம் செலுத்தலாம். இத்திட்டத்தில் சேர ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், கணினி சிட்டா, நடப்புப் பருவ அடங்கல், முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, அறிவிக்கை செய்யப்பட்ட இயற்கை இடா்ப்பாடுகளால், குறிப்பாக வறட்சி, வெள்ளம், புயல், ஆலங்கட்டி மழை உள்ளிட்ட தவிா்க்க முடியாதவற்றால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். கடைசி நேர நெரிசலைத் தவிா்க்க முன்கூட்டியே காப்பீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

