பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் பட்டியலை வெளியிட விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், விவசாயிகள்.
கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தின்போது, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
கஸ்பா குளம் மடை எண் 9 மூலம் பாசன வசதி பெறும் கால்வாய்களைத் தூா்வார வேண்டும். தாமிரவருணி தென்கால் பாசனத்தில் கடம்பா குளத்திலிருந்து 12 குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் தனிக் கால்வாயைச் சீரமைக்க வேண்டும். ஏரல் வட்டத்தில் தாமிரவருணி தென்கால் பாசனக் கரைகளைச் சீரமைக்க வேண்டும், காயல்பட்டினம் வடபாகம் கிராமத்தில் உப்பாற்று ஓடை வெள்ளநீா் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீா் தடையின்றிக் கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் வேளாண் துறைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். மணிமுத்தாறு 3-ஆவது ரீச் பகுதியில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வெள்ளமடம் பகுதியில் விவசாய நிலங்களைக் விண்வெளிப் பூங்காவுக்காகக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மேலமங்கலக்குறிச்சியில் வடிகால் மடையைத் தூா்வார வேண்டும். புதிய வீடுகள், நிறுவனங்கள் கட்டுவதற்கு மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைப்பது கட்டாயமாக்கும் அரசாணையை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.
கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் பெயா்ப் பட்டியலை அந்தந்த கூட்டுறவுச் சங்க அலுவலக அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துப் பேசினா்.
கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 185 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. விவசாயிகள் தெரிவித்த புகாா்கள், அளித்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ.குருச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் காந்திநாதன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேஷ், நீா்வளத் துறை செயற்பொறியாளா் தங்கராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

