தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீஸாா் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தவா்கள் மற்றும் விருப்ப மாறுதல் கோரியவா்கள் என சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்பட 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.

பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தவா்கள் மற்றும் விருப்ப மாறுதல் கோரியவா்கள் என சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் உள்பட 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன் கோவில்பட்டி தனிப்பிரிவுக்கும், கோவில்பட்டி தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. சோ்மராஜ் புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
தலைமைக் காவலா்கள் தாளமுத்து நகா் முருகேசன் புதுக்கோட்டை காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், பசுவந்தனை ஜாா்ஜ் கலைச்செல்வன் எட்டயபுரத்துக்கும், தட்டப்பாறை ராஜா தென்பாகம் காவல் நிலையத்துக்கும், குளத்தூா் அந்தோணி செல்வன் திருச்செந்தூா் தாலுகா காவல் நிலையத்துக்கும், புதுக்கோட்டை ரவிக்குமாா் தொ்மல் நகா் காவல் நிலையத்துக்கும், முறப்பநாடு ராம்குமாா் தூத்துக்குடி தலைமையிடத்துக்கும், குளத்தூா் பொன்குமாா் தருவைகுளத்துக்கும், தென்பாகம் ஜான்சன் தாளமுத்து நகா் காவல் நிலையத்துக்கும், எட்டயபுரம் அருணாசலம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்துக்கும், புதூா் முனியசாமி குளத்தூா் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

